எப்படி ?
புதன், 18 நவம்பர், 2009
புதிர்கள்
எப்படி ?
புதன், 18 மார்ச், 2009
பண்டைய கால ஜொள்ளு
ஆற்றில் குளித்து கொண்டு இருக்கும் பெண்ணை ஒரு சிறுவன் பார்க்கிறான் . அதை அந்த பெண் பார்த்து விடுகிறாள் .அப்போது இந்த வரிகளை பாடுகிறாள் ;
மாடு மேய்க்கும் சிறு தம்பியரே
மாற்றான் சிறு குழந்தாய்
மாடு தான் போகுதடா
மாமலைக்கு அப்பால்
அதை கேட்ட அந்த சிறுவன்,
மாடுதான் போனாலென்ன
மாமலைக்கு அப்பாலே
நீ குளிக்கும் மஞ்சளிலே
நீராடி போவேனடி
அந்த பெண் ,
மண்ணுருசி நீ அறியாய்
மரத்துருசி நீ அறியாய்
பெண்ணுருசி நீ அறியாய்
போடா சிறு தம்பியரே
அதை கேட்ட அந்த சிறுவன் ,
மண்ணுருசி வெள்ளாமை
மரத்துருசி சந்தனம்
பெண்ணுருசி வட்ட முகம்
பாராமல் போவேனோ
அந்த பெண் சிறுநகையுடன்,
ஆளான ஆளுமில்லை
ஆளுக்கு ஏத்த தோளுமில்லை
முன்கை பருக்கவில்லை
முகத்திலேயும் அரும்பவில்லை
இப்போது சிறுவன் ,
சித்தருவால் வெட்டதா
சிறு மிளகு உரைக்காதா
இந்த சிறுவன் பாய்ச்சுந்தண்ணி
கமுகுகேறிப் பாயாதா
அந்த பெண் துணிகளை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று விட்டாள்.
( பயபுள்ள நம்ம கூட சேர்ந்தவன் போல இருக்குது .)
வெள்ளி, 12 டிசம்பர், 2008
குறுஞ்செய்தி
சர்தார்ஜி ஜோக்குகள் :
ஒருவன் : என் பொண்ணு கொஞ்சம் 'குண்டு' ....
சர்தார் : பொண்ணு பேர் என்ன ?
ஒருவன்: அணு .....
சர்தார் : அப்போ, அணு குண்டு இன்னு சொல்லுங்க .
சர்தார்: சார் என் வீட்டுல T.Vய தவிர மத்த எல்லா பொருள்களையும் திருடிட்டானுக ,
போலீஸ் : T.Vய மட்டும் ஏன் திருடலை ?
சர்தார் : நான் T.Vபார்த்துகிட்டு இருந்தேன்
சர்தார் : டார்லிங் , இன்று இரவு என் வீட்டிற்கு வா . யாரும் இருக்க மாட்டார்கள் .
நண்பி: சரி வருகிறேன் .
நண்பி சர்தார் வீட்டிற்கு போன போது வீட்டில் யாருமே இல்லை .
சர்தார் : நான் என் காதலிக்கு மூன்று வருடங்களாக தினமும் காதல் கடிதம் எழுதி அனுப்பி கொண்டு இருந்தேன் .
நண்பன்: பிறகு என்ன ஆனது ?
சர்தார் : அவள் தபால் காரனை திருமணம் செய்து கொண்டாள்
சர்தார் : வணக்கம் மச்சான் '
டாக்டர் : யோவ் , டாக்டரை போய் மச்சான்னு கூப்பிடுற
சர்தார்: நீங்க தானே இந்த நர்ஸ்சை சிஸ்டர்னு கூப்பிட்டிங்க
மாணவன் பரீட்சை பேப்பருடன் 100 ருபாய் தாளை வைத்து
'ஒரு ரூபாய்க்கு ஒரு மார்க் போடுங்க ' என்று எழுதிருந்தான்
பேப்பர் திருத்துபவர் சர்தார் ,
பேப்பரை திருத்திவிட்டு 81 ரூபாயை உள்ளே வைத்து ' நீ வாங்கியது 19 மார்க் மீதி சில்லறை ' அப்படின்னு எழுதினார்
ஒருவர்: எதுக்கு ரயில் நிலையத்தில் எல்லோரும் கைல கிளாஸ்ஓட வரிசையில் நிற்கிறார்கள்
சர்தார்: இப்போ தான் அறிவிச்சாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் சரக்கு ரயில் வரும்னு ..
சர்தார்: இந்த புத்தகம் சுவாரஸ்யமாகவே இல்லை . நிறைய கேரக்டர் இருக்கு . ஆனா கதை இல்லை
நூலகர் : வாடா......வா...... நீதான் நுழைவு பதிவேட்டை கொண்டு போனவனா .
ஆசிரியர் : இந்த உலகத்துல ரொம்ப நாள் உயிர் வாழும் விலங்கு எது? சர்தார்: வரி குதிரை .
ஆசிரியர் :எப்படி ?
சர்தார்: இன்னும் அது கருப்பு வெள்ளைல தான் இருக்குது
திங்கள், 1 டிசம்பர், 2008
சுஜாதா
காந்தனது காதலி யாம்சாந்தி
காலையில் எடுத்தாலாம் வாந்தி ,
'அதனாலே' இல்லே
இது வேறே தொல்லே ;
ஒத்துகலே, காரா பூந்தி :
சுய தொழில் செய்பவருக்கு கடனாக
அரசாங்கம் செய்கிறதாம் 'கைடு'
ஆனால் சரோஜாவுக்கு மட்டும் ஏன்
போலிசால் அடிக்கடி 'ரெய்டு ' .
செவ்வாய் நிற்கிறான் எட்டில்
மாப்பிள்ளை வீட்டார் இருபத்திஎட்டில்
நான் நிற்கிறேன் முப்பத்திஎட்டில்
இனி எனக்கு ஏது கட்டில் .
பாபருக்கு வேண்டும் மசூதி
ராமருக்கு வேண்டும் கோவில்
ஜனங்களுக்கு வேண்டும்
சுகாதாரமான
கழிப்பறைகளேனும்.
-மானுஷ்யபுத்திரன் -
- நன்றி குமுதம் -
கொஞ்சம் கைச்சரக்கு ,
நிஷாவும் ,உஷாவும்
நாட்டையும் ,வீட்டையும் நாசப்படுத்துகிறன .
ஏதோ என்னால் முடிந்தது
செய்திகளில் படிப்பதும் ,
எதுவும் கேட்காததுபோல் உட்கார்வதும் ,
இறைவா
அடுத்த பிறவியிலாவது
எலியாக
பிறக்க வேண்டும் .
அவள் கைகளில் 'mouse' .
சுஜாதாவின் நினைவாக ,
காண்டம் ,
உன்னாலே எனக்கு மூன்று நாள் வியாபாரம் கெட்டது,
விஸ்பெர்,
நீ கவனமா இல்லாததல எனக்கு பத்து மாசம் வியாபாரம் கெட்டு
விட்டது .
இது ஆபாசம் இல்லை என்றால் நீங்கள் தாரளமாக சுஜாதாவின் அனைத்து புத்தகத்தையும் படிக்கலாம் .
