சர்தார்ஜி ஜோக்குகள் :
ஒருவன் : என் பொண்ணு கொஞ்சம் 'குண்டு' ....
சர்தார் : பொண்ணு பேர் என்ன ?
ஒருவன்: அணு .....
சர்தார் : அப்போ, அணு குண்டு இன்னு சொல்லுங்க .
சர்தார்: சார் என் வீட்டுல T.Vய தவிர மத்த எல்லா பொருள்களையும் திருடிட்டானுக ,
போலீஸ் : T.Vய மட்டும் ஏன் திருடலை ?
சர்தார் : நான் T.Vபார்த்துகிட்டு இருந்தேன்
சர்தார் : டார்லிங் , இன்று இரவு என் வீட்டிற்கு வா . யாரும் இருக்க மாட்டார்கள் .
நண்பி: சரி வருகிறேன் .
நண்பி சர்தார் வீட்டிற்கு போன போது வீட்டில் யாருமே இல்லை .
சர்தார் : நான் என் காதலிக்கு மூன்று வருடங்களாக தினமும் காதல் கடிதம் எழுதி அனுப்பி கொண்டு இருந்தேன் .
நண்பன்: பிறகு என்ன ஆனது ?
சர்தார் : அவள் தபால் காரனை திருமணம் செய்து கொண்டாள்
சர்தார் : வணக்கம் மச்சான் '
டாக்டர் : யோவ் , டாக்டரை போய் மச்சான்னு கூப்பிடுற
சர்தார்: நீங்க தானே இந்த நர்ஸ்சை சிஸ்டர்னு கூப்பிட்டிங்க
மாணவன் பரீட்சை பேப்பருடன் 100 ருபாய் தாளை வைத்து
'ஒரு ரூபாய்க்கு ஒரு மார்க் போடுங்க ' என்று எழுதிருந்தான்
பேப்பர் திருத்துபவர் சர்தார் ,
பேப்பரை திருத்திவிட்டு 81 ரூபாயை உள்ளே வைத்து ' நீ வாங்கியது 19 மார்க் மீதி சில்லறை ' அப்படின்னு எழுதினார்
ஒருவர்: எதுக்கு ரயில் நிலையத்தில் எல்லோரும் கைல கிளாஸ்ஓட வரிசையில் நிற்கிறார்கள்
சர்தார்: இப்போ தான் அறிவிச்சாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் சரக்கு ரயில் வரும்னு ..
சர்தார்: இந்த புத்தகம் சுவாரஸ்யமாகவே இல்லை . நிறைய கேரக்டர் இருக்கு . ஆனா கதை இல்லை
நூலகர் : வாடா......வா...... நீதான் நுழைவு பதிவேட்டை கொண்டு போனவனா .
ஆசிரியர் : இந்த உலகத்துல ரொம்ப நாள் உயிர் வாழும் விலங்கு எது? சர்தார்: வரி குதிரை .
ஆசிரியர் :எப்படி ?
சர்தார்: இன்னும் அது கருப்பு வெள்ளைல தான் இருக்குது
